சேது பட ஹீரோ வாய்ப்பை மிஸ் பண்ணிய பிரபல நடிகரின் தந்தை நடிகர்.! தட்டி தூக்கிய விக்ரம்.!  - Seithipunal
Seithipunal


நடிகர் விக்ரம் நடிப்பில் பாலா இயக்கிய திரைப்படம் தான் சேது. இந்த படத்தில் தனது நண்பர்களுடன் சுற்றி திரிந்த சியான் விக்ரம் அதன் பின் அபிதாவை காதலித்துக் கொண்டு சுற்றி வருவார். எதிரிகள் தாக்குதலில் அவருக்கு பலமாக அடிபட்டு மன நோயாளியாக மாறிவிடுவார்.

பின் மன நோயில் இருந்து அவர் குணமாகி காதலியை கரம் பிடித்தாரா என்பது பற்றி தான் இந்த படம் அமைந்திருக்கும். இதில், இருக்கும் பாடல்களும், இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் நடிக்க பல நடிகர்களும் மறுப்பு தெரிவித்து விட்டனராம். அதற்கு காரணம் படத்தில் மொட்டை அடிக்க வேண்டும் என்று கூறியதுதான். அப்படி பலரும் மறுத்த இந்த படத்தில் நடிக்க ஓகே சொன்னவர் நடிகர் முரளிதானாம். 

ஆனால் மொட்டை அடிக்க வேண்டும் என்ற காரணத்தால் மற்ற படங்களில் நடித்துக் கொடுத்துவிட்டு வருகிறேன் என்று பாலாவிடம் அவர் தெரிவித்துள்ளார். இந்த படம் நீண்ட நாட்கள் தள்ளிக்கொண்டே சென்றதால் இதில் விக்ரமை வைத்து பாலா இயக்க ஆரம்பித்ததாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murali missed Sethu movie chance


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->