முன்பதிவிலேயே வசூலை வாரி குவிக்கும் மோகன் லால் திரைப்படம்! - Seithipunal
Seithipunal


மலையாளத் திரை உலகில் மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ''ஜல்லிக்கட்டு'' திரைப்படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது. 

இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான 'நண்பகல் நேரத்தில் மயக்கம்' திரைப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. 

தற்போது மோகன் லால் நடிப்பில் 'மலைக்கோட்டை வாலிபன்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. 

மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் கேரள மாநிலத்தில் இந்த திரைப்படத்தின் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது. 

ஆன்லைன் மூலமாக முதல் நாளிலேயே 1 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரூ. 1.24 கோடி வசூலித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mohan Lal film update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->