''மிஷன்'' ஓடிடி ரீலிஸ் அப்டேட்? - Seithipunal
Seithipunal


முறை மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் அருண் விஜய். இதனை தொடர்ந்து அருண் விஜய் பாண்டவர் பூமி, இயற்கை, தடையறத் தாக்க போன்ற படங்களில் நடித்து தனக்கு என ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். 

தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தின் மிஷன் சாப்டர் 1 என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. 

இந்த திரைப்படம் ரூ. 30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 16ஆம் தேதி நெட்பிளிகிஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தகவலால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பிலும் உற்சாகத்திலும் உள்ளனர்/


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mission OTT release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->