கேரள பாரம்பரிய இஸ்லாமிய முறையில், வேட்டியுடன் வளைகாப்பு.. பரத் பட நடிகையின் வீடியோ வைரல்.! - Seithipunal
Seithipunal


கேரள நடிகையான பூர்ணா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். கேரள மாநிலம் கண்ணூரைச் சார்ந்த இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். கடந்த 2004 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சு போல் ஒரு பெண்குட்டி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இவர். தமிழில் பரத்திற்கு ஜோடியாக முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

நடிகை அசினின் சாயலில் இருக்கும் இவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். நடிகர் விஜய் கூட  அசின் போல இவர் வருவார் என்று பாராட்டினார். சில வருடங்களுக்கு முன் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களை பற்றிய வரலாற்றுத் தொடரில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து பெயர் பெற்றவர்.

இவர் கடந்த வருடம் துபாயைச் சார்ந்த  பிரபல தொழிலதிபரான ஷானித் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு தனது வளைகாப்பு புகைப்படங்களை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் இவர் ரசிகர்களுடன் பகிர்ந்து இருந்தார். அந்தப் புகைப்படங்கள் ட்ரெண்டாகியது.

தற்போது இவருக்கு சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் வைத்து பாரம்பரிய இஸ்லாமிய முறைப்படி  அவரது குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தி இருக்கின்றனர். இந்தப் புகைப்படங்களையும் அது தொடர்பான வீடியோ பதிவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பூர்ணா. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

malayalam actress poorna baby shower pics went viral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->