மஹாராஜா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கோலிவுட்டிlum முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வரும் இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ளன.

இதற்கிடையே விஜய் சேதுபதி தனது 50 வது படத்திலும் நடித்து முடித்துள்ளார். பேஷன் ஸ்டுடியோ நிறுவன தயாரிப்பில் நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் ‘மகாராஜா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் ‘மகாராஜா’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, இந்தப்படம் வரும் மே மாதம் 16 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ‘மகாராஜா’ கண்டிப்பாக ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

maharaja movie release date announce


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->