நடிகராக களமிறங்கும் லோகேஷ் கனகராஜ்.! அதுவும் இந்த பிரபலத்துடனா.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது தளபதி விஜய் வைத்து  மிகப்பெரிய பட்ஜெட்டில் லியோ படத்தை இயக்கி வருகிறார்.

ரேடியோ ஜாக்கியியாக இருந்து நடிகராகவும் இருந்தவர் ஆர் ஜே பாலாஜி. இவர் நானும் ரவுடிதான் தீயா வேலை செய்யணும் குமாரு மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷங்க போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் ரன் பேபி ரன் என்ற திரைப்படம் வெளியாகிறது.

தற்போது வெளியாகியிருக்கும் செய்தியின் படி இயக்குனர்  லோகேஷ் கனகராஜ் ஆர்ஜே பாலாஜி நடிக்கும்  திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட்டில் ஹாட் டாக்காக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜீவாவும் ஒரு கெஸ்ட் ரோல் செய்ய இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தான் இயக்கிய மாஸ்டர் திரைப்படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் சிறிய ரோலில் நடித்திருப்பார். அதன் பிறகு தற்போது தனது நண்பர் ஆர் ஜெ பாலாஜிக்காக கெஸ்ட்ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி இன் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்புகள் அதிகரிக்க துவங்கி விட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lokesh kanagaraj to act in rj balaji movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->