லெஜெண்ட் சரவணனின் முதல்பட ரிலீஸ் தேதி.. முதல் படமே.. பான் இந்தியா மூவி.! - Seithipunal
Seithipunal


கோலிவுட்டில் பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தி லெஜண்ட் படத்தில் நடித்து அறிமுகமாகி இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு பிரம்மாண்டமாக அரங்குகள் அமைக்கப்பட்டு ட்ரெய்லர் மற்றும் பாடல் காட்சிகள் சமீபத்தில் வெளியான நிலையில் அதனை கண்டு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருந்தனர்

இதோடு நிறுத்திக் கொள்ளாமல் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக முதலில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை தான் தேர்வு செய்துள்ளார்கள் என்ற தகவல் வெளியாகியது. 

ஆனால், முன்னணி நடிகைகள் யாரும் அவருடன் நடித்தால் மார்க்கெட் போய்விடும் என்று பயந்து ஒதுங்கினர். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டாலாவை கதாநாயகியாக புக் செய்துள்ளனர்.

சமீபத்தில் தி லெஜன்ட் படத்தின் ஆடியோ லான்ச் 10 கோடி ரூபாய் செலவு செய்து பிரம்மாண்டமாக உருவான நிலையில் அதில் சிறப்பு விருந்தினராக கிட்டத்தட்ட பத்து நடிகைகளுக்கு 6.5 கோடிக்கு மேல் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்டது தகவல் வந்தது. இந்த நிலையில், இந்த படம் வரும் ஜூலை 26- ல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்கதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legend Saravanan Movie in July 28


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->