முதல் படம் முடிவதற்குள் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி..! - Seithipunal
Seithipunal


பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் 'தி லெஜண்ட்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், லெஜண்ட் சரவணன் தான் நிச்சயமாக இரண்டாவதாக ஒரு படத்தில் நடிப்பேன் என்று கூறியுள்ளார். 

ஊர்வசி ரவுடேலா உள்ளிட்ட பிரபல நடிகைகள் இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிலையில் 'தி லெஜண்ட்' ஒரு பான் இந்தியா வெளியீடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆக்சன், நகைச்சுவை மற்றும் காதல் என்று பல கலவையாக திடீர் திருப்பங்களுடன் உருவாகிய இந்த படத்தில் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக நடித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இந்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தயாரிப்புக்குழு எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. தொடர்ந்து பிரபல இரட்டையர்களான ஜேடி - ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் படத்தில் கதாநாயகியாக உர்வசி ரவுடேலா நடித்திருக்கிறார்.

மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் ரோபோ ஷங்கர், யோகி பாபு, பிரபு, நாசர், மயில்சாமி, சிங்கம்புலி போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். மூன்று வருட இடைவெளிக்கு பின் இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அத்துடன் மூன்று நிமிடங்கள் ஓடும் 'தி லெஜெண்ட்' படத்தின் டிரெய்லரில் சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Legend saravana next movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->