சந்திரமுகி-2 ல் லாரன்ஸுக்கு ஜோடியாவது அந்த நடிகையா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2005ஆம் ஆண்டு ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா,நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சந்திரமுகி. அந்தக் காலத்திலேயே 200 கோடி பட்ஜெட்டில் தயரான இந்த படம் ரூ. 650 கோடி கிட்டதட்ட படம் வசூலித்தது., 2 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்க வேண்டும் என்று முன்பே இயக்குனர் பி.வாசு முடிவு செய்து விட்டதாக கூறப்பட்டது

இந்த நிலையில், சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் நடிகராக ராகவா லாரன்ஸ் மற்றும் நகைச்சுவை நாயகனாக வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.

மேலும், இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது ஜிகர்தண்டா 2 மற்றும் ருத்ரன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், அடுத்ததாக சந்திரமுகி 2 படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. இந்த நிலையில், இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனன் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lakshmi Menon in chandramuki 2


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->