கேஜிஎஃப்-2 படத்தின் முன்பதிவு துவக்கமா.?! ஒரு மாதத்திற்கு முன்பே களை கட்ட ஆரம்பித்த திருவிழா.! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டில் வெளியாக உள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று கேஜிஎஃப்-2. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் யாஷ் அதீரா, சஞ்சய் தத், ரவீனா டண்டன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய வழிகளில் வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 படத்தின் ட்ரைலர் வரும் மார்ச் 27ஆம் தேதி மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கேஜிஎப் 2 படத்தின் டீசர் வெளியாகி 240 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தற்போது கேஜிஎப் படத்திற்கான முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கோழிக்கோடு, கொடுங்கல்லூர் மற்றும் திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KGF movie 2 pre booking may open 


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->