விபத்தில் சிக்கிய கே.ஜி.எப் பட நடிகர்.. தற்போது எந்த நிலையில் இருக்கின்றார் தெரியுமா.?! - Seithipunal
Seithipunal


பிரபல இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் ஹீரோவாக நடித்து வெளியாகிய படம் தான் கே.ஜி.எப் 2. இந்த படம் 2 பாகங்களாக வெளியாகியது. இது பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக மற்றும் வசூல் ரீதியாக மிகவும் சாதனை படைத்துள்ளது.

இந்த திரைப்படத்தில் கேங்க்ஸ்டராக நடிகர் அவினாஷ் நடித்து இருக்கின்றார். அவர் சமீபத்தில் கார் விபத்தில் சிக்கி இருக்கின்றார். இது குறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டுள்ள பதிவில், "சரியாக நான் காலை 6.05 மணியளவில் என்னுடைய வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

நான் காரில் ஜிம்மை நோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது ​​​​அனில் கும்ப்ளே சர்க்கிள் அருகே இருக்கும் சிக்னலில் பச்சை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இருப்பினும், அந்த ஆளில்லாத ரோட்டில் சிவப்பு சிக்னலைத் தாண்டி வேகமாக வந்த ஒரு கண்டெய்னர் லாரி என் காரில் மோதியது.

அந்த ஆக்சிடெண்ட் என்னுடைய கார் பானட் கிழியும் அளவிற்கு ஏற்ப்பட்டது. இருப்பினும், அந்த  எனக்கு எந்த காயமும் ஏற்படவில்லை, காருக்கு மட்டும் தான் கடுமையான சேதாரம் ஏற்பட்டது. உங்கள் அன்பிற்கும், கடவுளுக்கும் நன்றி என்று பதிவிட்டு இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KgF actor got accident


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->