கவினால் இம்ப்ரெஸ் ஆன குஷ்பூ.! அதிர்ச்சியில் ட்வீட் போட்ட கவின்.! - Seithipunal
Seithipunal


சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமடைந்த கவின் அதன்பின்னர் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். அவருக்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார்.

இவருக்கு மிகப்பெரிய ஆர்மியே உருவாகியது. ஆனால், பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர் இருவருமே தங்களது காதலை வளர்க்காமல் தங்களது கேரியரை வளர்க்க கவனம் செலுத்த ஆரம்பித்தனர். இவர்களது காதலை போற்றிய ரசிகர்களுக்குத்தான் இது மிகவும் வருத்தத்தை கொடுத்தது.

இந்த நிலையில் லிப்ட் படத்தில் அமிர்தா ஐயருடன் சேர்ந்து நடித்து இருந்தார். லிப்ட் படத்தை தொடர்ந்து, நடிகர் தற்போது ஆகாசவாணி என்ற பெயரில் வெப் சீரிஸில் நடித்து வரும் நடித்துள்ளார். சமீபத்தில் ஆகா தமிழ் என்ற ஓடிடி தளம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை குஷ்பு கவின் குறித்து மிகப் பெருமையாக பேசி கவின் ஒரு ஸ்டார் ஆகிவிட்டார் என்று கூறினார். 

இதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்த கவின் நீங்கள் கூறியதை நினைத்து நான் இன்னும் அதிர்ச்சியில் இருக்கிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin impressed kushboo 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->