H.வினோத் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


உலகநாயகன் கமல்ஹாசனின் 233வது திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் இயக்குனர் எச்.வினோத். இவர் அதன்பின் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற எச்.வினோத் முதன் முதலில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார்.

அடுத்தடுத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களையும் வினோத் இயக்கினார். சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார். 

இந்த நிலையில் கமல்ஹாசனின் 233 திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இந்த திரைப்படத்தில் நடிக்கும்  நடிகர், நடிகைகள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhasanin 233 movie directed by H.Vinoth


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->