கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணி உறுதி.? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


சதுரங்க வேட்டை திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக நிறைய ரசிகர்களை பெற்றவர் தான் இயக்குனர் எச்.வினோத். இவர் அதன்பின் கார்த்தி நடிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற எச்.வினோத் முதன் முதலில் நேர்கொண்ட பார்வை என்ற படத்தை இயக்கினார்.

 அடுத்தடுத்து வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களையும் வினோத் இயக்கினார். சமீபத்தில் வெளியான துணிவு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது. அதிகபடியாக சமூகப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு படம் எடுக்கும் எச்.வினோத் ஆக்ஷன் படங்களை தான் இயக்கி இருப்பார். 

இவர் தற்போது நகைச்சுவை ஜானரில் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் அல்லது கமல்ஹாசனை வைத்து புதிய படத்தை வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் தற்போது உலகநாயகன் நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஹெச்.வினோத் இருவரும் சந்தித்துக் கொண்ட கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், கமல்ஹாசனின் அடுத்த படத்தை இயக்குனர் வினோத் இயக்க உள்ளது உறுதியாகி உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalhasan and vinoth photo viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->