சாதியை ஒழித்து சமநிலை சமூகத்தை உருவாக்கும் பெருங்கருவி காதல்.. கமல்ஹாசன் காதலர் தின வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்தியாவில் காதலர் தினங்கள கொண்ட சமூக ஆர்வலர்கள் உட்பட சில அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட மாநிலங்களில் காதலர் தினங்களில் ஜோடியாக சுற்றும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைப்பது மற்றும் அடித்து துரத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆனால் வெளிநாடுகளில் காதலர் தினங்களை அவர்களின் முக்கிய பண்டிகையை போல கொண்டாடி வருகின்றனர். 

இந்தியாவில் காதலர் தினத்திற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், நடிகர்கள் மற்றும் கவிஞர்கள் ஆதரவுகளை தெரிவித்து காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் காதலர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் 'சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamalahasan wishes lovers day in tweeter


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->