அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் கைக்கோர்க்கும் கமல்.? வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி அட்டகாசமான விமர்சனங்களை பெற்ற நிலையில், இது 450 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகியது. 

அடுத்ததாக நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்தப் படத்திற்குப் பின் அவர் யாருடன் இணைவார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான எச்.வினோத்துடன் கமல் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படம் அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.எச். வினோத் அஜித்தின் #AK61 படத்தையும், கமல் இந்தியன் 2 படத்தையும் முடித்த பின் இதன் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal may Join next Movie with h Vinoth


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->