இன்று வெளியாகிறது 'கல்கி 2898 ஏ.டி.' படத்தின் மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் 'கல்கி 2898 ஏ.டி.' படத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வருகிறார். இவருடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன், ராணா, துல்கர் சல்மான், திஷா பதானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

அதிக செலவில் அறிவியல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இந்த படம் மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. 

அதாவது, படத்தில் வி.எப்.எக்ஸ் பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், 'கல்கி 2989 ஏ.டி படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அப்டேட் கொடுத்துள்ளது. அந்த அறிவிப்பின் படி இன்று இரவு 7.15 மணிக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kalki 2898 ad movie update today


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->