வெளியானது சைரன் படத்தில் ஜெயம் ரவியின் பஸ்ட் லுக் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


வெளியானது சைரன் படத்தில் ஜெயம் ரவியின் பஸ்ட் லுக் போஸ்டர்.!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி.  சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார்.

'சைரன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ அண்மையில் வெளியானது. கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார். 

இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவிக்கு இன்று பிறந்தநாள். இதனை முன்னிட்டு படக்குழுவினர் படத்தில் அவருடைய முதல் தோற்றத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில், ஒரு தோற்றத்தில் அமைதி கலந்த கோபமான தோற்றத்திலும் மற்றொன்று இளமை துள்ளலுடன் ரொமன்ஸ் பார்வையிலும் உள்ளது.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jeyam ravi first look poster released from sairn movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->