யூடியூபில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த ஜவான் பாடல்கள்.! - Seithipunal
Seithipunal


யூடியூபில் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்த ஜவான் பாடல்கள்.!

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜவான்’. இந்தப் படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான 'ஜிந்தா பந்தா,' 'வந்த எடம்,' மற்றும் 'தும்மே துளிபெலா' என்று இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.

ஒரு படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் யூடியூப் தளத்தில் முதல் மூன்று இடங்களில் டிரெண்டிங்கில் உள்ளது. பாடல்கள் வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் யூடியூப் தளத்தில் 46 மில்லியன் பார்வைகளைப் பெற்று 2023 ஆண்டில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக மாறியுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் முதன்முறையாக, ஒரு திரைப்படத்தின் மூன்று மொழி வீடியோ இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் யூடியூப் தளத்தின் உலகளாவிய தரவரிசையில் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது. 

இது சமீபத்திய காலங்களில் எந்தவொரு பாடலும் செய்யாத சாதனை என்று படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

javan movie songs trending in you tube


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->