நாயகன் பட கமல்ஹாசன் ரீல் மகளா இது.? சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படங்கள்.! - Seithipunal
Seithipunal



நாயகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனதா. நாயகன் திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகளாக இவர் நடித்த கார்த்திகா என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய ஒன்று. கமல்ஹாசனுக்கு இணையான கதாபாத்திர வடிவமைப்புடன்  இந்த கதாபாத்திரம் திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தது.

நாயகன் படம் தவிர மற்ற திரைப்படங்கள் இவருக்கு அவ்வளவு சிறப்பாக அமையாததால் 1988 ஆம் ஆண்டு சுனில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்டார் நாயகன் கார்த்திகா.

இந்த தம்பதியினருக்கு  விஷ்ணு சுனில் ஜெயக்குமார் என்ற மகன் உள்ளார்.  கால்நடை மருத்துவராக பணியாற்றி வரும் இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு  பூஜா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

நடிகை சுனதா அவ்வப்போது சமூக வலைதளங்களில் தனது குடும்பம் தொடர்பான புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இவரது புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள்  நாயகன் கார்த்திகாவா இது என ஆச்சரியமாக ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is this kamalhassan daughter in movie photos goes viral on social media


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->