லியோ பட குழுவில் இணைந்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.?! காஷ்மீரிலிருந்து வெளியிட்ட வீடீயோ வைரல்.!  - Seithipunal
Seithipunal


தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் லியோ. இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், டைரக்டர் மிஸ்கின் மற்றும் கௌதம் மேனன், பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத்  என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து கொண்டிருக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தின் சூட்டிங் தற்போது காஷ்மீரில் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் காதலர் தினத்தன்று நடிகை திரிஷா லியோ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படங்களை பகிர்ந்து  ரசிகர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் தற்போது  'லெஜெண்ட்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

லெஜெண்ட் சரவணன் தற்போது  காஷ்மீரில் இருக்கும் ஒரு புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார். லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இவர் அங்கு படப்பிடிப்பிற்காக சென்று இருக்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக அவரும் லியோ படத்தில் பணியாற்றலாம் என்ற கருத்தும் ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வைரல் செய்து வரும் ரசிகர்கள், லெஜெண்ட் சரவணனும் லியோ பட குழுவில் இணைந்துள்ளதாக  தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.  உண்மை என்ன? என்பது பட  குழுவினரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு தான் தெரியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

is legend movie actor saravanan be a part of leo crew his photo from kashmir creates a buzz in kollywood


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->