பிரபல விஞ்ஞானி 'ஜி டி நாயுடு' வாழ்க்கை வரலாற்று படம்.! 'ஹீரோ'வாக நடிக்க போவது இந்த நடிகர் தானா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் உடனே நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மாதவன். அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் சாக்லேட் பாயாக அறிமுகமாகிய இவர் தற்காலங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.  இறுதிச்சுற்று  என்ற திரைப்படத்தின் மூலம்  தனது சாக்லேட் பாய் இமேஜை உடைத்தார் மாதவன்.

ஐ.எஸ்.ஆர்.ஓ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ராக்கெட்ரி என்ற திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. இந்த வாழ்க்கை வரலாற்று படத்திற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஞ்ஞானி நம்பி நாராயணனாக அவரது கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருந்தார் மாதவன்.

இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படுபவர் கோயம்புத்தூரைச் சார்ந்த விஞ்ஞானி ஜி டி நாயுடு என்ற  கோபால்சாமி துரைசாமி நாயுடு. பல தனித்துவம் மிக்க கண்டுபிடிப்புகளின் மூலம் சாதனை புரிந்த விஞ்ஞானி இவர். இவரது பல கண்டுபிடிப்புகளும் உலக அளவில் பல விருதுகளை பெற்றுள்ளன.  தன்னுடைய பெரும்பாலான கண்டுபிடிப்புகளை சுயநலமில்லாமல் தனது பெயரில் காப்புரிமை செய்யாமல் விட்டவர்.

இப்படிப்பட்ட தன்னலமற்ற வரலாற்று சிறப்புமிக்க ஒரு விஞ்ஞானியின்  வாழ்க்கை வரலாற்று திரைப்படமானது விரைவில் படமாக இருக்கிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியாகியது. அதன்படி இந்த  திரைப்படத்தை மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தத் திரைப்படத்தில் ஜி டி நாயுடு கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்கிறார். இதை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் மற்ற கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

indian scientst gd naidu biopic will be filming soon madhavan to act in gd character


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->