''என்னுடைய வாழ்க்கைத் துணையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளேன்'' - விஜய் தேவரகொண்டா - Seithipunal
Seithipunal


எனக்கு 'லைகர்' படம் ஒன்றும் முதல் தோல்விப் படம் கிடையாது. நான் பல தோல்விகளை பார்த்தவன் என்று நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் ''குஷி''. ஹைதராபாத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. 

இந்த விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா தெரிவித்திருப்பதாவது, ''சரியாக படம் போகவில்லை என்றால், அது நம்மை காயப்படுத்தும். 'லைகர்' ஒன்றும் எனக்கு முதல் தோல்விப் படம் கிடையாது. 

நான் கடந்த காலங்களில் நிறைய தோல்விகளை சந்தித்துள்ளேன். அதேபோல கடந்த காலங்களில் நான் பல்வேறு வெற்றிகளையும் பார்த்திருக்கிறேன்.

வெற்றி, தோல்வி ஆகிய இரண்டின் அனுபவங்களையும் நான் சந்தித்துள்ளேன். வெவ்வேறு வகையான கதைகளை சொல்லிக்கொண்டிருக்கிறோம். என் லட்சியம், ஆக்கபூர்வமான ஒன்றை பின்தொடர வேண்டும் என்பதுதான். 

என் வாழ்க்கையை அதற்காக அர்பணித்துள்ளேன். நான் தோல்விகளை பார்த்து பயப்படுபவன் அல்ல. ஒரு படம் வெற்றி பெறாமல் தோல்வி அடைந்து எனக்கு வலியை கொடுத்தாலும் அடுத்தடுத்து முயற்சியை தொடர்வதில் இருந்து என்னை எதுவும் தடுத்துவிடுவதில்லை. தடுமாற்றத்தை கண்டு நான் அஞ்சமாட்டேன். 

மேலும், ஏன் என்னை பெண் வெறுப்பாளர் என்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. என்னை நன்கு அறிந்தவர்களுக்கு நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என தெரியும். தற்போது நான் என்னுடைய வாழ்க்கைத் துணையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I am searching for my life partner Vijay Devarakonda


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->