கமலுக்கு பின், தனுஷை இயக்கவுள்ள எச்.வினோத்.?! ஆலோசனை தீவிரம்.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் எச் வினோத் மூன்றாவது முறையாக நடிகர் அஜித்குமாரை வைத்து படம் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை வரிசையில் துணிவு படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

அஜித்தின் இந்த படத்திற்கு பின்னர் விஜய் சேதுபதியுடன் எச்.வினோத் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தை கோப்ரா மற்றும் மாஸ்டர் உள்ளிட படங்களை தயாரித்த லலித் தயாரிக்க இருக்கிறார். இதையடுத்து வினோத் கமலஹாசன் நடிக்கவுள்ள ஒரு படத்தை இயக்க இருக்கின்றார். 

தற்போது விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். தளபதி 67 படத்தை தயாரிப்பதில் லலித் பிஸியாக இருக்கின்றார். 

எனவே விஜய் சேதுபதி திரைப்படத்திற்கு முன்பாக கமல் படத்திற்கு பின்பாக நடிகர் தனுஷை வைத்து எச்.வினோத் ஒரு புது படத்தை இயக்க உள்ளதாக ஒரு தகவலில் கூறப்படுகிறது. இந்த படத்திற்கான கூட்டணி பேச்சு வார்த்தைகள் மற்றும் ஒப்பந்தம் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h vinoth direct dhanush movie


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->