நட்டி நடராஜுக்கு ஜோடியாகும் பூனம் பஜ்வா.! இயக்குனர் யார் தெரியுமா.?!  - Seithipunal
Seithipunal


சதுரங்க வேட்டை, மிளகாய், போங்கு, எங்கிட்ட மோதாதே, கர்ணன், சண்டிமுனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகர் நட்டி நடராஜ். 

இவர் இறுதியாக தனுசுடன் கர்ணன் திரைப்படத்தில் நடித்திருந்தார். வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் அவரது கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில், அவர் பிரபல நடிகை பூனம் பஜ்வாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்திருக்கிறார். நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.பி.தனசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இந்த படத்திற்கு குருமூர்த்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gurumoorthy movie update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->