இரட்டை வேடங்களில் தெறிக்கவிட்ட காஜல் - கோஸ்டி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் குலேபாகாபலி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் இயக்குனர் கல்யாண். தற்போது இவரது இயக்கத்தில் தயாராகி வரும் படம் கோஸ்டி. இந்த படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ராதிகா, ஆடுகளம் நரேன், தங்கதுரை, மனோபாலா, ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் வருகிற மார்ச் மாதம் 17 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்திற்கான ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திருமணம் மற்றும் குழந்தை பிறப்பு உள்ளிட்ட காரணங்களால் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் இருந்து காஜல் அகர்வால் நீக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காஜல், தான் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதை உறுதி செய்தார். காஜல் நடிப்பில் கடைசியாக "ஹே சினாமிகா" படம் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gosti movie trailer release


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->