திரௌபதி மோகனின் 'பகாசூரன்' திரைப்படத்தின் மாஸ் அப்டேட்.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன்.ஜி. இந்த படத்தில் சீரழியும் இளம் பருவத்தினர் குறித்த கதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். இவரது அடுத்த படமான திரௌபதி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகியது.

அத்துடன் இந்தப்படம் சர்ச்சையான படமாகப் பார்க்கப்பட்டது. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகியும் நல்ல வசூல் வேட்டை செய்ததாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி கௌதம் மேனனை வில்லனாக்கி எடுத்த திரைப்படம்தான் ருத்ரதாண்டவம். இதில் சீரியல் நடிகை தர்ஷா குப்தா ஹீரோயினாக அறிமுகமாகினார். 

இந்த படமும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. அடுத்ததாக மோகன் ஜி இயக்கும் படம்தான் பகாசூரன். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் சதுரங்கவேட்டை புகழ் நட்டி நட்ராஜ் இருவரும் நடிக்கின்றனர். இது படத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமீபத்தில், இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

மகாபாரதத்தில் வரும் அரக்கனாகிய பகாசுரனின் கேரக்டரை இது அடிப்படையாக கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் சமீபத்தில் வெளியாகிய போஸ்டரில், "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற வாக்கியம் எழுதப்பட்டுள்ளது, படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பகாசூரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 09:01 மணிக்கு வெளியாகும் என இந்த திரைப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Draupadi mohan G bakasuran 1st look tomorrow release


கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது



Advertisement

கருத்துக் கணிப்பு

பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள இருப்பது




Seithipunal
--> -->