#BREAKING : அதிர்ச்சி மரணம்.. 'ப்ரண்ட்ஸ்' பட இயக்குனர் காலமானார்.! - Seithipunal
Seithipunal


பிரபல மலையாள இயக்குனர் சித்திக் உடல்நலக் குறைவால் காலமானார்.

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் இஸ்மாயில் மலையாள சினிமாவில் 20க்கும் திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தமிழில், விஜய்யின் ஃபிரண்ட்ஸ், காவலன் ஆகிய திரைப்படங்களையும், விஜயகாந்தின் எங்கள் அண்ணா திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று  திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதில் இவருக்கு நிமோனியா மற்றும் கல்லீரல் நோய்க்கான சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது எக்மோ உதவியுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வந்த இயக்குனர் சித்திக் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது இவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director siddique passed away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->