ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி! - Seithipunal
Seithipunal


பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் கீரவாணி உள்ளிட்டோர் ஆஸ்கர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

2023 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் தேர்வு குழுவில் மொத்தம் 398 பேர் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களில் சில இந்திய பிரபலங்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஒளிப்பதிவாளர் கேகே செந்தில்குமார், தயாரிப்பாளர் கரன் ஜோகர் உள்பட பிரபலங்களும் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், உலக அளவில் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக தற்போது கமல்ஹாசனை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்திற்கான பணிகளில் மணிரத்னம் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில்  திரையுலகின் உட்சபட்ச விருதாக கருதப்படும்  ஆஸ்கார் விருது அமைப்பின் உறுப்பினராக  இயக்குனர் மணிரத்னம் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இயக்குனர் மணிரத்னத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆஸ்கர் குழுவில் ஏற்கனவே ஏ.ஆர். ரகுமான், நடிகர் சூர்யா ஆகியோர் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Mani Ratnam Music Composer Keeravani on Oscar Selection Committee


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->