இயக்குநர் கே.வி.ஆனந்த் மகள் திருமணம்- நேரில் வந்து வாழ்த்திய விஜய் சேதுபதி!! - Seithipunal
Seithipunal


மறைந்த இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்தின் மகள் திருமண விழா சென்னை எழும்பூரில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் இயக்குனர் மணிரத்தினம் நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இயக்குனர் கே வி ஆனந்த் கனா கண்டேன், அயன், மாற்றான், அனேகன், உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் பணிகளில் இருந்தபோது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக கே.வி.ஆனந்த் காலமானார். இந்த நிலையில் அவரின் மகள் சாதனா ஸ்ரீக்கும், விஷ்ணுராஜ் என்பவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

KV ஆனந்த் இயக்கத்தில் நடித்த பல நடிகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ளவே இல்லை. ஆனால் நடிகர் விஜய்சேதுபதி தனது பிஸியான கால்ஷீட்களுக்கு மத்தியிலும் நேரத்தை ஓதுக்கி இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனையடுத்து இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director KV Anands daughters wedding Vijay Sethupathi congratulated in person


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->