தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது படம் - வெளியானது மாஸ் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. சுதந்திரப் போராட்டக் காலத்தைக் கதைக்களமாகக் கொண்டு இயங்கி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

இதையடுத்து தன்னுடைய இயக்கத்தில் இரண்டாவது படமாக 'டி50' படத்தை தனுஷ் இயக்கி முடித்துள்ளார். சமீபத்தில் 'டி50' படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியானது. இதில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் இயக்குனர் அவதாரத்தில் இறங்கியுள்ள நடிகர் தனுஷ், தன்னுடைய அக்கா மகன் சரவணகுமாரை ஹீரோவாக அறிமுகப்படுத்தி, படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார் 3 பாடல்களை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் தனுஷின் அக்கா மகன் சரவணகுமாருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடிக்கிறார். மேலும், இந்தப் படத்தில் தனுஷ், சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் சேகர் கம்முலா படத்தில் இணையவுள்ளார். தற்போது, நடிகர் தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகி வரும் இந்த மூன்றாவது படம் குறித்தான போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

அதில், கடற்கரையில் இரவு நேரத்தில் யாருமில்லாத பென்ச் ஒன்றில் பேப்பர் மட்டும் உள்ளது. மேலும், அந்த போஸ்டரில் நாளைய தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், டைட்டில் மற்றும் முதல் பார்வை வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director dhanush joined third movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->