"சிங்குச்சா" பாடலுக்கு 'சிஎஸ்கே' அணி வீரர்களின் அசத்தல் நடனம்! இன்ஸ்டாகிராமில் வைரலான வீடியோ! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 16 வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் போட்டி தொடர்களில் 10 அணிகள்  விளையாடி வருகின்றன. சென்னையை தலைமை இடமாகக் கொண்டு விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் போட்டி தொடர்களில் ஒரு வெற்றிகரமான அநியா ஆகும்.

இதுவரை நாலு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள சென்னை அணி கடந்த ஐபிஎல் போட்டிகளில் முதல் சுற்றோடு வெளியேறியது. இதனால் இந்த வருடம்  கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்று அது உறுதியுடன் களமிறங்கி இருக்கிறது.

இந்நிலையில் சென்னை அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த அணியின் வீரர்கள் கலந்து கொண்ட ஒரு வீடியோ ஒன்று ரசிகர்களிடம் வைரலாகி இருக்கிறது. சிங்குச்சா பாடலுக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் நடனமாடும் அந்த வீடியோ  ரசிகர்களிடம் பிரபலமாகி உள்ளது. இந்த வீடியோ இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் பெற்று  ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக்சஹார், ரவீந்திர ஜடேஜா,அஜிங்க ரகானே மற்றும் ருத்ராஜ் ஆகியோர் பொற்காலம் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலான சிங்குச்சா சிங்குச்சா பாடலுக்கு ஏற்ப  நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

csk players dancing for chingucha song goes viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->