திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்ட குக் வித் கோமாளி புகழ்..! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ் தனது திருமணப் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

விஜய் டிவியில் நடக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். அந்த நிகழ்ச்சியை இவருக்காகவே பார்ப்பவர்கள் ஏராளம். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது தமிழ் சினிமாவிலும் தடம் பதித்து சில படங்களில் நகைச்சுவை நடிகராக  நடிக்கத் துவங்கியிருக்கிறார். 

மேலும் இவர் "ஜூ கிப்பர்" என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார். இந்நிலையில், புகழுக்கும் பென்ஸியா என்பவருக்கும் இன்று (செப்டம்பர் 1)திருமணம் நடைபெற்றது. இதில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

Pugazh_OG

இதனையடுத்து, புகழ் தனது திருமண புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், யாரையாவது திருமணம் செய்து மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை லட்சியமாக கொண்டிருப்பதாக நகைச்சுவையாக தெரிவிப்பார். தற்போது அவருக்கு திருமணம் முடிந்துள்ளதால் விரைவில் மனைவியுடன் அந்த நிகழ்ச்சியில் எதிர்பார்க்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cook with comali pugazh mariage photos share twitter


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->