#விடுதலை : இன்னும் படமே ரிலீஸ் ஆகல.. ஊரிலிருந்து லாரி, லாரியா ஆட்களை அழைத்து வந்து சூரி செய்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் தற்போது காமெடி நடிகர்களாக இருப்பவர்களில் முதன்மையாக இருப்பவர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் கதாபாத்திரத்தில் இவர் சிறப்பான காமெடியை வெளிப்படுத்தியிருந்ததால் அதிலிருந்து 'பரோட்டா சூரி' என சினிமா ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

அந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து  கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம்,  ரஜினிமுருகன் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நகைச்சுவை நடிப்பால் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கறிய பட்டவர். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் விடுதலை திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் சூரி. இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும், கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இத்திரைப்படத்திற்கான ட்ரெய்லர் ரிலீஸ் மற்றும் ஆடியோ வெளியீடு நிகழ்வு கடந்த வாரம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் படத்தின் இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜா மற்றும் படக்குழுவினரும், பல்வேறு சினிமா பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் நடிகர் சூரிக்கு ரசிகர்களின் வரவேற்பு பலமாக இருந்தது. அவரது பெயரைக் கூறி கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டே இருந்தனர் ரசிகர்கள். இளையராஜா பேசும் போது கூட அவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்ததால் மைக்கை வைத்து விட்டு போய் விடுவேன் என கூறியது நமக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில், நடிகர் சூரி தனது ஊரிலிருந்து ரசிகர்களை காசு கொடுத்து லாரியில் அழைத்து வந்ததாக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தெரிவித்து இருக்கின்றனர். தனக்கு நிகழ்ச்சியில் மாஸ் காட்டுவதற்காக முதல்முறையாக அறிமுகமான சூரி இப்படி ஏற்பாடு செய்ததாக பலரும் தெரிவித்திருக்கின்றனர். இது திரையுலகில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

comedy actor soori pay money to the people and create mass for him at viduthalai audio launch


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->