"என்னை பேச வைத்தால், உன் மானம் கப்பல் ஏறிவிடும்" சமந்தாவிற்கு சிட்டிபாபு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்து சில தினங்களாகவே நடிகை சமந்தா மற்றும் தயாரிப்பாளர் சிட்டிபாபுவிற்கு இடையேயான மோதல் வலுத்து வருகிறது. குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்து சாகுந்தலம் என்ற திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது.

இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 60 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதால் சமந்தாவிற்கு எதிரான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

இந்நிலையில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான சிட்டிபாபு சகுந்தலை கதாபாத்திரத்திற்கு பொருத்தமில்லாத சமந்தாவை  கதாநாயகியாக தேர்ந்தெடுத்தால் திரைப்படம் எப்படி வெற்றி பெறும் என்று சர்ச்சையான கருத்தை கூறியிருந்தார். மேலும் அவரது  நோயெல்லாம் ஒரு நாடகம் தான் எனவும் விமர்சித்து இருந்தார். இந்தத் திரைப்படத்துடன் அவரது கதாநாயகி வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது எனவும் கூறியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காதுகளில் ஒருவருக்கு ஏன் அதிகமாக முடி வளர்கிறது என்ற தகவலை கூகுளில் தேடி அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருந்தார் சமந்தா சிட்டிபாபுவிற்கு காதில் அதிகமாக முடி இருக்கும் என்பதை மறைமுகமாக குறிப்பிட்டு அவரது ஆணாதிக்க தனத்தை சுட்டிக்காட்டும் வகையில் அந்த பதிவு இருந்தது.

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் யூடியூப் சேனல் ஒன்றில் பேசியிருக்கிறார் சிட்டிபாபு. இந்த பேட்டியில் சமந்தா தனது பெயரை நேரடியாக குறிப்பிடாததால் தானும் அவரது பெயரை  நேரடியாக குறிப்பிடவில்லை எனக் கூறியிருக்கும் சிட்டிபாபு. என் காதில் உள்ள முடியை பற்றி பேசாமல் நான் பேசி இருக்கும் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேச வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் கப்பல் ஏறிவிடும் எனவும் கடுமையாக கூறி இருக்கிறார் அவர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chitibabu warns Samantha that if you make me talk your dignity will sink


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->