செக் மோசடி வழக்கு.. லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான லிங்குசாமி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி மற்றும் சமந்தாவை வைத்து 'எண்ணி 7 நாட்கள்' என்ற திரைப்படத்தை தயாரிப்பதற்காக. பி.வி.பி கேப்பிட்டல் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் தொகையை கடனாக வாங்கியுள்ளார்.

இதனையடுத்து கடனை திருப்பிக் கொடுக்க இயக்குனர் லிங்குசாமி கொடுத்த 35 லட்சம் ரூபாய்க்கான காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பியது. இதனையடுத்து பிவிபி நிறுவனம் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் கடனை வட்டியுடன் திருப்பி செலுத்தவும் உத்தரவிட்டது.

இதனையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இயக்குனர் லிங்குசாமி தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தார்.

மேலும், லிங்குசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவர் தள்ளுபடி செய்தார். இதனால் இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை உறுதியாகியது.

இதனையடுத்து இயக்குனர் லிங்குசாமி காசோலை மோசடி வழக்கு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த நிலையில் இயக்குநர் லிங்குசாமிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டணையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்திவைத்தது. மேலும், காசோலை தொகையில் 20 சதவீதத்தை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Check Fraud case Director Lingusamy to 6 months in jail punishment stopped


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->