36 வருடங்களுக்கு பிறகு பிரபல இயக்குனருடன் இணையும் கமல்.! பாலிவுட் நடிகை ஹீரோயினா.? - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவின் உலகநாயகனாக வலம் வருபவர் கமலஹாசன். இவர் நடித்த விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் தனது சினிமாவில் பிஸியாகிவிட்டார் இவர்.

சங்கர் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு வெளியான வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இதன் முதல் பாகத்தில் நடித்த கமல்ஹாசனை இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்க அனிருத் இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தையும் சங்கரே இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் தீபாவளிக்கு முன்பாக படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்தினத்துடன் இணையயிருக்கிறார் கமல்ஹாசன். நாயகன் திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் இணையப் போகும் திரைப்படம் இதுவாகும்.

இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க திரிஷா மற்றும் நயன்தாரா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நிலையில் இருவரும் வெவ்வேறு காரணங்களால் விலகி விட்ட நிலையில் பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன் கமல்ஹாசனுடன் இணையயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் மணிரத்தினத்தின் குரு திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bollywood actress paired with Kamal Haasan for the first time new update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->