#Biggboss 6 : வைல்ட் கார்டில் எண்ட்ரி கொடுக்கப்போகும் நடிகை.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு.!  - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

அதைத் தொடர்ந்து சாந்தி, அசல் கோளார், ஷெரீனா, VJ மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்சீ உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய பல வாரங்கள் கடந்த நிலையில் இன்னும் வைல்ட் கார்டு என்ட்ரியாக புதியவர்கள் யாரும் நுழையவில்லை.

இந்த நிலையில், தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வைல்ட் கார்டு எண்ட்ரி குறித்து பதிவிடப்பட்டுள்ளது. அதில், ரசிகர்களை பார்த்து பிக் பாஸ் 6 வைல்டு கார்டு எண்ட்ரியில் நுழைய போகும் நடிகை யார் என்று கண்டுபிடியுங்கள் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 wld card entry


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->