#பிக்பாஸ்6 : இந்த வார எவிக்‌ஷனில் வெளியேறப்போவது இவரா.?! லீக்கான தகவல்கள்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், தான் பிக் பாஸ் சீசன் 5 முடிந்து, 6வது சீசன் வரை வந்துள்ளது. 6 வது சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்கியது. 

20 போட்டியாளர்களுடன் துவங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே நிறைய சண்டை சச்சரவுகள் இருந்து வருகின்றன. இதில் 21ஆவது போட்டியாளராக மைனா நந்தினி உள்ளே நுழைந்தார். இதன் பின்னர் பிக் பாஸ் வீட்டில் அனைவருக்கும் பிடித்த நபராக இருந்த ஜி.பி.முத்து தானாகவே வெளியேறினார். 

தனது குடும்பத்தை பிரிந்து தன்னால் இருக்க முடியவில்லை என்று கூறிவிட்டு அவர் வெளியேறிய நிலையில் சாந்தி, அசல் கோளார், ஷெரீனா உள்ளிட்டோர் அடுத்தடுத்த வாரங்களில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். 

இத்தகைய நிலையில், நாளை வார இறுதி என்பதால் நிகழ்ச்சியில் கமல் வந்து போட்டியாளர்களுடன் உரையாடுவார். அடுத்ததாக இந்த வாரம் எந்த போட்டியாளர் வெளியேறுவார் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று வெளியேற்றப்படுவார் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 Eviction Of This 4th Week


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->