ஜோவிகாவை மறைமுகமாக கலாய்த்த பிக்பாஸ் பிரதீப்.! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 7 ல் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், போட்டியாளர்களும் வீட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள். அதன் படி இந்த வாரம் ஜோவிகா வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கிடையே பிரதீப் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 'ஜோஜோ' என்று குறிப்பிட்டு ஒரு நாயின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு அவர் ஜோவிகாவை தான் மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து கொண்டுள்ளனர்.

அதற்கு பிரதீப் 'ஒரு நாய் போட்டோ கூட நிம்மதியா போடவிட மாட்டேங்கிறாங்களே' என்று அதற்கு பதிலும் கொடுத்துள்ளார். ஏற்கனவே, பிக் பாஸ் வீட்டில் இருந்த போது பிரதீப்புக்கும் ஜோவிகாவுக்கும் இடையில் நிறைய சண்டை வந்துள்ளது. 

ஆனால் வெளியே வந்த பிறகு அது குறித்து தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதீப், வனிதா விஜயகுமாரிடம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bigg boss pradeep about tweet jovika


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->