#வீடியோ: ஜெயம் ரவியின் பிரபல படத்தில் நடித்தது பாரதி கண்ணம்மா லக்‌ஷ்மியா.?! - Seithipunal
Seithipunal


விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் கடந்த சில வருடங்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

இதில் கண்ணம்மாவாக ரோஷ்னி ஹரிப்ரியன் நடித்துவந்தார். தற்போது ரோஷினி ஹரிப்ரியனுக்கு வெள்ளித்திரையில் கதாநாயகியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறி சமீபத்தில் அவர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகினார்.

அதன்பின்னர், கண்ணம்மா கதாபாத்திரத்தை பிரபல மாடல் அழகி வினுஷா தேவி ரிப்லேஸ் செய்து வருகின்றார். இவர் அச்சு அசலாக ரோஷிணி ஹரிப்ரியன் போலவே இருப்பதால் உடனே கண்ணம்மாவாக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். இதில் பாரதி மற்றும் கண்ணம்மாவுக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். 

அதில் ஒரு குழந்தைதான் லக்ஷ்மி. இந்த லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரக்‌ஷா ஷ்யாம். அவர் நிறைய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ரக்‌ஷா ஷ ஜெயம் ரவியின் வனமகன் படத்தில் நடித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bharathi kannamma lakshmi Video Viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->