பிக்பாஸ் சீசன் 7 - விளையாட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்..!  - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் சீசன் 7 - விளையாட்டை விட்டு வெளியேறிய முக்கிய பிரபலம்..! 

தமிழில் பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் பிரம்மாண்டமாகத் தொடங்கியது. 18 பேருடன் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களிடையே ஏராளமான கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் நடந்து வந்தது.

இந்த நிலையில் முதல் வார நாமினேஷன் பட்டியலில் பவா செல்லத்துரை, ஐஷு, அனன்யா ராவ், ரவீனா தாஹா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி உள்ளிட்ட ஏழு பேர் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர். 

இந்த நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்று இருந்தவர்களில் யுகேந்திரன் வாசுதேவன் மற்றும் அனன்யா ராவ் மற்றவர்களை காட்டிலும் குறைவான வாக்குகளை பெற்று இருந்ததால் அவர்களில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அதன் படி, கடந்த வெள்ளிக்கிழமை கமல்ஹாசன் கலந்து கொண்ட எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இருந்து யுகேந்திரன் எவிக்ட்டாகியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில், நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்த பவா செல்லத்துரை தான் பிக்பாஸ் விளையாட்டை விட்டு வெளியேற முடிவு செய்து, வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் விளையாட்டு ஆரம்பமாகி முதல் வாரத்திலேயே ஒருவர் வீட்டிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bava chelladurai decision leave game and left bigg boss house


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->