"நான் முட்டாள் இல்லை." அசல் கோளாறு.. வெளியிட்ட வீடியோ.! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதத்தில் துவங்கியது. இதில் 20 போட்டியாளர்களுடன் துவங்கியது. பின்னர் 21வது போட்டியாளராக மைனா நந்தினி நுழைந்தார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் சாந்தி வெளியேற்றப்பட்டார். 

அடுத்ததாக அசல் கோளாறு வெளியேற்றப்பட்டுள்ளார். அசல் கோளாறு வீட்டிற்குள் இருந்தபோது பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்பட்டது. இளம் போட்டியாளரான இவர் மீது ஆரம்ப காலத்தில் ரசிகர்களுக்கு நல்ல எண்ணம் இருந்தது. ஆனால் அவர் பெண்களை கையாண்ட விதம் கோபத்தை உண்டு பண்ணியது. 

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவர் இதுவரை தனக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் குறித்து எந்த பதிவும் கூறாமல் இருந்து வந்தார். இப்போது, அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். 

அதில், "பிக் பாஸ் வீட்டில் என் வீட்டில் இருப்பது போல தான் நான் இருந்தேன். எனது செயல் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருந்தால் அதை நான் மாற்றிக் கொள்ள முயற்சிக்கிறேன். 

ஆனால் நீங்கள் மீம்களில் குறிப்பிடுவதைப் போல அங்கு யாருமே என்னை தவறாக நினைக்கவில்லை. இத்தனை பேர் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் தவறாக நடந்து கொள்ளும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

asal kolar about BB6


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->