ஆர்யா - முத்தையா படத்தின் டீஸர் குறித்த அப்டேட்.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலம் 2015இல் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகம் ஆனார். 

அதன் பின்னர், ஆர்யா நடிப்பில் நான் கடவுள், ஓரம் போ, பாஸ் என்கிற பாஸ்கரன், மதராசபட்டினம், சேட்டை, ராஜா ராணி, வேட்டை உள்ளிட்ட 25 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகின. இதன் மூலம் அவர் மிகப்பெரிய நடிகராக உருவெடுத்தார்.

 சமீபத்தில் அவர் ரஞ்சித் இயக்கத்தில் சார் பேட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்திருந்தார். அவர் பிரபல திரைப்பட நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் ஆர்யாவின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் முத்தையா  இயக்கி வருகிறார். மேலும், இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை ட்ரம் ஸ்டிக் புரொடக்ஷன் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்த நிலையில் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் வரும் மார்ச் 31ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arya in kadharbatsha enkira muthuramalingam teaser release on March 31


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->