ஹாலிவுட் ஸ்டைலில்.. லெஜன்ட் சரவணாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் நடித்துள்ள லெஜன்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் என சரவணன் அருள் விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், தற்போது புதிய திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இந்த படத்தை நடிகர் அஜீத் குமாரை வைத்து உல்லாசம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அருள் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோ இன்று 9: 55 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு தி லெஜன்ட் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arul Saravanan in The legend movie 1st look poster release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->