''அரண்மனை 4'' திரைப்படத்தின் முக்கிய அப்டேட்! வைரலாகும் போஸ்டர்.! - Seithipunal
Seithipunal


சுந்தர். சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை'. ஹன்சிகா, ஆண்ட்ரியா, ராய் லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்த திரைப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்புடன் வரவேற்பை பெற்றது. 

இதனை தொடர்ந்து 'அரண்மனை 2' திரைப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி வசூலை குவித்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு 'அரண்மனை 3' திரைப்படம் எடுக்கப்பட்டது. 

இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா, ராசி கண்ணா, ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றதை தொடர்ந்து ''அரண்மனை 4'' திரைப்படத்தை சுந்தர். சி இயக்கியுள்ளார். 

இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ராசி கண்ணா, தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகும் என படக் குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aranmanai 4 movie update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->