ஓடிடியில் சாதனை படைத்த அரண்மனை 3.! படக்குழு வெளியிட்ட தகவல்.! - Seithipunal
Seithipunal


அரண்மனை 3 திரைப்படம் ஓடிடி தளத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது.

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 3 திரைப்படம் கடந்த அக்டோபர் 14ம் தேதி  திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நடிகர் ஆர்யா, ராசிகன்னா, ஆண்ட்ரியா, யோகி பாபு, சாக்ஷி அகர்வால், நளினி, நந்தினி, மனோபாலா, சம்பத், அமித் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ளர். 

கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தை ஃபேமிலி ஆடியன்ஸ் காப்பாற்றியுள்ளது. அதன் காரணமாக அரண்மனை 3 அனைத்து இடங்களிலும் வசூல் வேட்டை நடத்தியது.

திரையரங்குகளில் வெளியான பிறகு சமீபத்தில் ஜீ 5 ஒடிடி தளத்தில் வெளியான நிலையில் அரண்மனை 3 திரைப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது‌. அந்த வகையில் இந்த படம் வெறும் 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aranmanai 3 new record in OTT


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->