யூடியூபில் புதிய சாதனை படைத்த விஜயின் 'அரபிக்குத்து'.. உற்சாகத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜயின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. கடந்த ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

ஆனால், இந்த படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அரபிக் குத்து பாடல் யூட்யூபில் 500  மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arabic kuthu song 500 million views on youtube


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->