"என்னதான் ஆச்சு இந்த சீசனுக்கு"? குக் வித் கோமாளி மணிமேகலையை தொடர்ந்து இன்னொரு கோமாளியும் விலகல்! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் ஒரு நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் சமையலுடன் சேர்ந்த காமெடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒன்று.

அதிலும் கோமாளிகளாக வருபவர்கள் செய்யும் அட்டகாசங்கள் மிகவும் வேடிக்கையாகவும் ரசிக்கும் படியும் இருக்கும். இந்த நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலை நிபுணர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

சில நாட்களுக்கு முன்பு குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து  தான் விலகிக் கொள்வதாக பிரபல தொகுப்பாளர் மணிமேகலை அறிவித்திருந்தார். இது குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் வந்து ரசிகர்களை மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தவர் இவர். இதனால் மணிமேகலை வெளியேறியது ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக அமைந்தது.

தற்போது இந்த நிகழ்ச்சியிலிருந்து மேலும் ஒருவர் விலகியிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வந்த குரேஷி என்பவர் தான் குக் வித் கோமாளி சீசன் 4 லிருந்து விலகுவதாக தனது ட்விட்டரில் செய்தி வெளியிட்டு இருந்தார். இது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. ஆனால் தற்போது அந்த  ட்விட்  டெலிட் செய்யப்பட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

another star walk out of cook with komali


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->