கமல் படத்தில் அன்பறிவ் சகோதரர்கள்! வைரலாகும் புகைப்படம்! - Seithipunal
Seithipunal


மெட்ராஸ் என்ற திரைப்படத்தின் மூலம் சண்டை பயிற்சியாளர்களாக அன்பறிவ் (அன்புமணி, அறிவுமணி) ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர். 

இவர்கள் தேசிய விருது பெற்று இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களின் மூலம் மிகவும் புகழ் பெற்றுள்ளனர். 

தற்போது அன்பறிவ் சகோதரர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் கனடா, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பணியாற்றி வருகின்றனர். 

விக்ரம் படத்திற்கு பிறகு கமலுக்கான மார்க்கெட் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் கமலஹாசன்-மணிரத்தினம் கூட்டணியில் கமல் 234 வது படம் உருவாகிறது. 

இதில் த்ரிஷா, துல்கர் சல்மான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ளதாகவும் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி கமலின் பிறந்தநாள் அன்று அறிமுக வீடியோ வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கமல் 234 வது படத்தில் அன்பறிவ் சகோதரர்கள் இணைந்துள்ளதாக பட குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anbariv Brothers in Kamal movie Viral photo


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->